×

உக்கடம் பஸ் நிலையத்தில் முதியவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

 

கோவை, பிப். 11: கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் முதியவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் முதியவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்குவது போல் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. ‘முதியவர் மீது தாக்குதல், ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்’ என்ற தலைப்பில் வீடியோ வைரலானது. இதனை பார்த்த உக்கடம் போலீசார் சம்பவ இடம் சென்று ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர்.

Tags : Ukkadam bus ,Coimbatore ,Ukkadam ,Coimbatore… ,
× RELATED தியாகி என்.ஜி.ராமசாமி நினைவுநாள் அனுசரிப்பு