- மதுக்கரை
- தர்மலிங்கம்
- அழகன்
- மதுக்கரை மரப்பலம்
- கிருஷ்ணவேணி
- செட்டிபாளையம்
- இந்திரா நகர்
- மதுக்கரை மார்க்கெட் சாலை
மதுக்கரை, பிப்.10: மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் அழகன் (37). இவரது மனைவி கிருஷ்ணவேணி (37). அழகன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி கிருஷ்ணவேணியை பின்னால் அமர வைத்துக்கொண்டு செட்டிபாளையத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இந்திரா நகர் அருகில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் திவாகர் என்பவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து அழகன் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணவேணி ரோட்டின் இடதுபுறம் விழுந்தார்.
அழகன் வந்த ஸ்கூட்டருக்கு பின்னால் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த மினி நான்கு சக்கர சரக்கு வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்த கிருஷ்ணவேணியின் தலையில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணவேணி கணவர் அழகன் அளித்த புகாரின் அடிப்படையில் மதுக்கரை போலீசார் இருசக்கர பைக்கில் வந்த திவாகர் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அகிலன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
