கோவை, பிப். 10: கோவை மாநகரில் விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 487 பேர் பேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் மூலம் ஆய்வு செய்யப்பட்டனர். 3132 வாகனங்கள் தனிக்கை செய்யப்பட்டு, 79 பேரின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக வார இறுதி நாட்களான கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு முதல் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் வாகன தனிக்கை, பண்ணை வீடுகள், ரவுடிகள் குறித்து, லாட்ஜ்கள் என பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவை மாநகரில் குற்றங்களை தடுக்க வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1500 போலீசார் ஈடுபட்டனர்.
