கோவை,பிப்.11:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி(21), பெயிண்டர். கோவையில் தங்கி பணியாற்றி வரும் இவர் பஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பஸ், 100 அடி ரோடு ஜிபி சிக்னல் அருகே சென்றபோது,வாலிபர் ஒருவர் மருதுபாண்டியின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். உடனே சுதாரித்த மருதுபாண்டி மற்றும் பயணிகள் அவரை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
