×

விரிவுரையாளர்கள் நுழைவாயில் போராட்டம்

தொண்டாமுத்தூர், பிப். 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தொண்டாமுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முன்பு நுழைவாயில் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் நலன் கருதியும், கவுரவ விரிவுரையாளர்களின் நியாயமான பணி நிரந்தரம் கோரிக்கை, மகப்பேறு விடுப்பு, இறந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழப்பிடு மற்றும் ஊதியம் குறித்து ஒரு நல்ல முடிவு எட்டும் வகையிலும் அவர்களை அழைத்து பேசி உரிய தீர்வு ஏற்பட தமிழக அரசு நடடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags : Thondamuthur ,Government Arts College ,Thondamuthur Government Arts College ,
× RELATED நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்