×

நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

 

கோவை, பிப். 11: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சேரன் மாநகரில் நாளை நடைபெற உள்ளது. கோவை விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Tags : Healthy Stalin ,Coimbatore ,Cheran City ,Cheran City, Vilankurichi Road, Coimbatore ,
× RELATED தியாகி என்.ஜி.ராமசாமி நினைவுநாள் அனுசரிப்பு