×

திருவள்ளூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கும் கன்டெய்னர் அறை தீப்பிடித்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கியுள்ள கன்டெய்னர் அறை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் அடுத்த பட்டரைபெருமந்தூர் பகுதியில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. சுங்கச்சாவடியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் அனைவரும் ஓய்வெடுக்கும் கன்டெய்னர் அறையில் உள்ளது. இந்த அறையில் நேற்றிரவு திடீரென்று புகை வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடிவந்துவிட்டனர்.

இதன்பின்னர் கன்டெய்னர் அறை அருகே சென்று பார்த்தபோது தீ மளமளவென பரவியது. இதையடுத்து ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அறையில் உள்ள சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த விளக்கு திரியை எலி தூக்கிச்சென்று துணிகள் உள்ள பகுதியில் போட்டுவிட்டு சென்றதால் தீ பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Thiruvallur ,Chennai ,Tirupati National Highway ,Patrayberumandoor ,
× RELATED ரோபோட்டிக் உதவியுடன் இதய தமனி பைபாஸ்...