×

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வேலை கேட்டு திரண்ட இளைஞர்கள்

 

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை கட்டுமான பணிகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக ரூ.900 கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவுபெற்று, 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக, கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனத்தினர் நேற்று முன்தினம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நெமிலி, பனப்பாக்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நேற்று வேலை கேட்டு திடீரென டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அருகே திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்னும் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்து அறிவிப்புகள் இல்லாததால், திடீரென இளைஞர்கள் அப்பகுதியில் திரண்டதால், கார் தொழிற்சாலை நிறுவனத்தினர் சார்பில் அறிவித்த பிறகு வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் வந்து, வேலை கேட்டு தொழிற்சாலை அருகே திரண்ட இளைஞர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Tags : Tata Motors ,NEMILI ,FACTORY ,BANAPAKAM CHIPKOT ,RANIPETTA DISTRICT ,K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் நடந்து வந்த எஸ்ஐஆர்...