×

அரூர் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரூர், பிப்.10: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், பழனி துரை மேற்பார்வையில் ஆசிரியர்கள் முன்னிலையில் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கண்காட்சி மூலம் புற்றுநோயை எப்படி வராமல் காப்பது, புற்றுநோய் அறிகுறியை தெரிந்துகொள்வது, அதற்கான விழிப்புணர்வை சென்னை மேலாளர் ரங்கேஷ் விளிக்கமாக எடுத்துரைத்தார்.

Tags : Arur Government School ,Arur ,Arur Government Boys' ,Higher Secondary School ,Arumugam ,Murugesan ,Palani Durai ,
× RELATED அரிவாளுடன் மிரட்டியவர் கைது