- திருப்பூர் ரயில்வே கேட்
- திருப்பூர்
- திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, புது ராமகிருஷ்ணாபுரம்
- கொங்கு மெயின் சாலை
- உத்துகுலி வீதி
திருப்பூர், பிப்.25: திருப்பூர் ஊத்துக்குளி சாலை புது ராமகிருஷ்ணபுரத்தில் 2வது ரயில்வே கேட் (LC no:132) உள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்த கொங்கு மெயின் ரோடு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரயில்வே கேட்டை கடந்து வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில்அவசர பராமரிப்பு பணி காரணமாக நேற்று காலை முதல் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து ரயில்வே கேட் மீண்டும் நாளை(26ம்தேதி) மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்ல ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
