×

டூவீலர் திருட்டு

போடி, பிப். 25: போடி பூங்கா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தீன் முகமது மகன் சாகுல் அமீது (29). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 11ம் தேதி இரவு, இவர் தனது டூவீலரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்குவதற்கு சென்றார். மறுநாள் காலையில் வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது டூவீலரை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் டூவீலரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடையாளம் தெரியாத நபர் டூவீலரை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போடி நகர் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் சாகுல் ஹமீது புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ஆய்வு செய்து, டூவீலரை திருடியவரை தேடி வருகின்றனர்.

 

Tags : Bodi ,Sakul Ameed ,Deen Mohammed ,Bodi Park Nagar 2nd Street ,
× RELATED சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு...