×

அரிவாளுடன் மிரட்டியவர் கைது

சாத்தூர், பிப்.25: சாத்தூர் அருகே இருக்கன்குடியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி புஷ்பலதா(34). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது கணவர் நடராஜன் இருக்கன்குடி கிராமத்தில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். கடந்த 21ம் தேதி இருக்கன்குடியில் இறப்பு வீட்டிற்கு நடராஜன் சென்றார்.

அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாடேஸ்வரன்(45), என்பவர் நடராஜனை அவதூறாக திட்டியுள்ளார். பின்னர் மாலையில் பலசரக்கு கடைக்கு அரிவாளுடன் வந்து, அங்கு இருந்த புஷ்ப லதாவை அவதூறாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாடேஸ்வரனை கைது செய்தனர்.

 

Tags : Chathur ,Natarajan ,Pushpalatha ,Iankudi ,Nadarajan ,
× RELATED சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு...