×

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

திருப்பூர், பிப்.25: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் கடந்த 20ம் தேதி காலை 10 மணிக்கு 2026- 2027ம் ஆண்டு பட்ஜெட் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டமும், 11 மணிக்கு சாதாரண கூட்டமும் நடைபெறுகிறது. எனவே இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : Tiruppur Corporation ,Tiruppur ,Mayor ,Dinesh Kumar ,
× RELATED வெள்ளகோவிலில் தனியார் பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து