×

ரேஷன் கடை முன் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை

போடி, பிப். 25: போடி காமராஜர் சாலையில் மார்க்கெட் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்குவதற்கு இரண்டு ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடை மூலமாக சுமார் 4,000க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரேஷன் கடை பகுதியில் நீண்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கடைகளுக்கு எதிர்ப்புறம் கடக்கும் கழிவுநீர் வாறுகாலில் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கழிவுநீர் கடக்க வழியின்றி பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதில் குப்பைகளும் சேர்ந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. இதனால் ரேஷன்கடைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க ரேஷன் முன் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags : Bodi ,Market Street ,Kamarajar ,Salai ,
× RELATED சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு...