×

அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கல்

காரியாபட்டி, பிப்.25: காரியாபட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வேங்கை மார்பன் முன்னிலை வகித்தார். விழாவில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவர் ஜெய பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பழனி, நகரச் செயலாளர் விஜயன், ஒன்றியப் பொருளாளர் மணி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ், இலக்கிய அணி செயலாளர் பாலசந்திரன், வழக்கறிஞர் அணி ராமநாதன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிற்சங்க பிரமுகர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 

Tags : AIADMK ,Kariyapatti ,AIADMK West Union ,Thoppur Murugan ,Chief Minister ,Jayalalithaa ,East Union ,Vengai Marpan ,
× RELATED சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு...