சென்னை: சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தொகுதிகள் 234 தான். இதில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளன என்பதை பார்த்து, தேர்தலுக்கு முன் சரி செய்யப்படும். நாடாளுமன்றத்தில் வெளியிடாத புத்தகத்தை வைத்து பேசக்கூடாது என்று சொல்கின்றனர்.
சில உண்மைகள் பா.ஜ.விற்கு கசக்கிறது. உண்மைகள் வெளியே வராமல் இருக்க, இதுபோல் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தியா கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
