×

முன்கூட்டி விடுதலை கோரிக்கையை நிராகரித்த உத்தரவை கைதியிடம் தெரிவிக்காததால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ள சம்பத் என்பவர் முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது மனைவி சந்தியா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இது விசாரணைக்கு வந்தது. மனுவை நிராகரித்த உத்தரவின் நகல் மனுதாரருக்கு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, மனுதாரர் வழக்கு தொடரலாம். வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயை உள்துறை, சிறைத்துறை தலைவர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Chennai ,Sampath ,Court ,Tamil Nadu government ,Sandhya… ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...