சென்னை: ஜி ஸ்கொயர் குழுமம், சென்னையில் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மேடவாக்கத்தில், தனது பிரீமியம் குடியிருப்பு மனை திட்டமான ‘ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன்’ 2ம் கட்டத்தை அறிவித்துள்ளது. 3.36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டுமனை திட்டத்தில், நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு மனைகளுடன், ஒரு சதுர அடிக்கு ரூ.6,999 என்ற சலுகை விலையில் (முதல் 25 முன்பதிவுகளுக்கு மட்டுமே) வழங்கப்படுகின்றன. வேளச்சேரி – தாம்பரம் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேடவாக்கம், சென்னையின் அதிவேக வளர்ச்சியை கொண்ட ஒரு குடியிருப்பு மையமாக திகழ்கிறது. இது பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் ஓ.எம்.ஆர் போன்ற முக்கிய பகுதிகளுடன் மிகச்சிறந்த போக்குவரத்து இணைப்பையும் கொண்டுள்ளது.
மேலும், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அருகாமையில் இருப்பதாலும், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னணி மருத்துவமனைகளை அருகாமையில் கொண்டிருப்பதாலும், இது பணிபுரியும் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மேடவாக்கம் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப மையத்தின் இதய பகுதியில் அமைந்துள்ள ஒரே பாதுகாப்பான வீட்டுமனை சமூக திட்டம் இதுவென்பது கூடுதல் தகவல்.
இப்பகுதி வலுவான சமூகம் சார்ந்த உள்கட்டமைப்பு, தடையற்ற பேருந்து வசதி மற்றும் ரயில் நிலைய வசதி ஆகியவற்றை கொண்டுள்ளதால், அன்றாட போக்குவரத்தை எளிமையாக மேற்கொள்ளலாம். அதோடு, வரவிருக்கும் மேடவாக்கம் மெட்ரோ ரயில் இணைப்பானது போக்குவரத்து வசதிகளை கூடுதல் சிறப்புடையதாக்கும். எனவே, மேடவாக்கம் சிறந்த இணைப்பு, மலிவு விலை மற்றும் நீண்ட கால நில மதிப்பீட்டு திறன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் முன்னிலையால் ஏற்பட்டுள்ள வலுவான தேவையினால், நிலையான மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் பயனர்களையும் முதலீட்டாளர்களையும் இப்பகுதி தொடர்ந்து ஈர்த்து வருகிறது. கூடுதலாக, ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன் திட்டமானது சந்தை மதிப்பை விடக் குறைவாகவும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது.
இந்த அறிமுகம் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில், “மேடவாக்கம் இன்று நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குடியிருப்புத் தேவைகள் சங்கமிக்கும் இடமாகத் திகழ்கிறது. ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன் மூலம், போக்குவரத்து இணைப்பு, வசதி மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான, உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ள வீட்டு மனைத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.
ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன், உலகத்தரம் வாய்ந்த வசதிகள், தார் சாலைகள், தெரு விளக்குகள், 24X7 சிசிடிவி கண்காணிப்பு, ஒரு வருட இலவச பராமரிப்பு மற்றும் தெளிவான ஆவணங்களுடன் கூடிய, உடனடியாக வீடு கட்டக்கூடிய பாதுகாப்பான சமூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் மனை வாங்கிய பிறகு வில்லா கட்டுமான உதவியையும் வழங்குகிறது, இது வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீட்டை எளிதாகக் கட்டி முடிக்க வழிவகை செய்கிறது,” என்றார்.
