×

மோடி 11ம் தேதி புதுவை வருகை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் 11ம் தேதி புதுச்சேரிக்கு வர திட்டமிட்டுள்ளார். தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் அன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் புதிய சட்டசபைக்கு அடிக்கல் நாட்டுவது, இந்திராகாந்தி விளையாட்டரங்கில் செயற்கை ஓடுதள பாதையை திறந்து வைத்தல், சாரதம்மாள் நகரில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

Tags : Modi ,Puducherry ,NR Congress ,BJP alliance ,Tagore Arts College ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு