- சென்னை
- சதுரகிரி மலை
- ராஜா
- வண்ணாரப்பேட்டை, சென்னை
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்
- சப்தூர், மதுரை மாவட்டம்
- சுவாமி...
வத்திராயிருப்பு: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜா (62). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் சென்னையை சேர்ந்த நண்பர்கள் 38 பேருடன் குழுவாக மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். நேற்று காலை தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி கோயிலுக்கு மலையேறி சென்றனர். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இரட்டை லிங்கம் அருகே சென்றபோது, ராஜா திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
