×

ஜேஇஇ 2ம் கட்ட தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: ஜேஇஇ 2ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 12 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

இதை தொடர்ந்து ஜேஇஇ 2ம்கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வை எழுதிய மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

Tags : JEE Mains ,Chennai ,NDA ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு