- சமத்துவ பொங்கல் விழா
- சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- நாகப்பட்டினம்
- சர் ஐசக் நியூட்டன் கல்லூரி
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
நாகப்பட்டினம், ஜன.14: நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று (13ம் தேதி) நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்தனர். விழாவின் தொடக்கத்தில் பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்தினர். விழாவில் சிலம்பம் சுற்றுதல், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், இயக்குனர் மற்றும் துறைத் தலைவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.இவ்விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஒருமித்த மனப்பாங்குடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
