×

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

மானாமதுரை, ஜன.5: மானாமதுரையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை போலீசார் அன்னவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த செல்லம் மகன் கோபாலகிருஷ்ணன்(19), பரமக்குடியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் அருண் (22) ஆகியோர் அந்த வழியாக டூவீலரில் வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற போது அவர்களை பிடித்து வாகனத்தை சோதனை செய்த போது டேங்க் பவுச்சில் 210 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தனர். போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Manamadurai ,Annavasal ,Gopalakrishnan ,Chelam ,Keelappasalai ,Arun ,Duraipandi ,Paramakudi ,
× RELATED தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள படகு சேதம்