காளையார்கோவில், ஜன.7:காளையார்கோவிலில் விளையாட்டு மையம் ஐந்தின் முதலாமாண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. காளையார்கோவில் விளையாட்டு மையங்களில் கூட்டமைப்பின் அங்கமான விளையாட்டு மையம் ஐந்தின் முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் விஐபி நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் பெண்களுக்கான எறிபந்து போட்டியும், இரண்டாவது நாளில் பெண்களுக்கான நடை போட்டி மற்றும் பள்ளி மாணவ,மாணவியருக்கான நடை போட்டியும், மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி மற்றும் அதிஷ்டம் யாருக்கு ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. பரிசளிப்பு விழாவில் விஐபி நகர் தலைவர் அமல்ராஜ் தலைமை வகித்தார். விஐபி நகர் செயலாளர் மாதவன் நாகராஜன் முன்னிலை வகித்தனர். விளையாட்டு மையம் ஐந்தின் தலைமை முதன்மைத் தூதுவர் விஐபி நகர் பொருளாளர் பாண்டி வரவேற்புரையாற்றினார். விளையாட்டு மையங்களின் தலைவர் பக்கீர் முகைதீன், செயலாளர் முனைவர் சூசை ஆரோக்கிய மலர், துணைச் செயலாளர் ஜான் பீட்டர், பொருளாளர் சுரேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, நிதிக்குழு செயலாளர் பார்த்திபன், தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்துக்குமார், விளையாட்டு மையம் நான்கின் உறுப்பினர் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பரிசுகளை வழங்கினர்.
