×

திண்டிவனத்தில் வீட்டில் வைத்திருந்த 9.5 பவுன் நகை மாயமான வழக்கில் வாலிபர் கைது

திண்டிவனம், ஜன. 7: திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை குமரன் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் முருகன் (41). இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள இரும்பு பீரோவில் நகை அடகு கடையில் இருந்து 1/2 சவரன் மோதிரத்தை மீட்டு பீரோவில் இருந்த நகை பையில் மற்ற நகைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். அதில் 9.5 பவுன் நகை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு மனை வாங்குவதற்காக நகைகளை மீண்டும் அடகு வைக்க நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகை பை மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் முருகன் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகனின் உறவினரான ரமேஷின் மகன் மணிகண்டன் (20) என்பவர் அதனை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நகைகள் குறித்தும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகள் மாயமான வழக்கில் உறவினரே கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tindivanam ,Murugan ,Masilamani ,Kumaran Street, Sanjeevirayanpet ,
× RELATED மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் நகை பறிப்பு