தேவகோட்டை, ஜன.7: தேவகோட்டை துணை மின்நிலைய செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.
