×

திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை கொள்ளை

திருக்கோவிலூர், ஜன. 7: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் மனைவி பிரேமா (33). இவர் கடந்த 5ம் தேதி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டு, பின்னர் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்குமென தெரிகிறது.

Tags : Thirukovilur ,Santosh Kumar ,Prema ,Chandapettai ,
× RELATED மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் நகை பறிப்பு