×

தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள படகு சேதம்

கடலூர், ஜன. 7: கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித்(45). இவர் சம்பவத்தன்று தனது படகை பழுது பார்ப்பதற்காக, அக்கரைகோரியில் உள்ள பட்டறையில் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென தீப்பிடித்து ஞானசேகர் என்பவரது படகும், பின்னர் ரஞ்சித்தின் படகும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சித்துக்கு சொந்தமான படகின் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Ranjit ,Subramani ,Devanambatnam, Cuddalur ,Akkarigori ,Ghanasekar ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...