- முதல் அமைச்சர்
- திண்டுக்கல்
- தமிழ்நாடு ஆசிரியர் மேம்பாட்டு சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- திண்டிகுல்...
திண்டுக்கல், ஜன. 5: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் தலைமையில் மாவட்ட தலைவர் சந்திரசேகரன்,
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மகளிர் செயலாளர்கள் வடிவுக்கரசி, யமுனா, மாநில தலைமை நிலைய செயலாளர் தாம்சன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
