இலுப்பூர், டிச. 5: அன்னவாசல் அருகே பைக் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(35). இவர் நேற்று காலை தனது பைக்கில் வெளிநாட்டிலிருந்து வந்த இதே பகுதியைச் சேர்ந்த வீரையா என்பவரை அழைக்க திருச்சி ஏர்போர்ட்க்கு சென்றார். வரும்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்த வீரையா பைக்கை ஓட்டி வந்துள்ளார். பைக் அன்னவாசல் – பொன்னமராவதி சாலை பேயால் வளையப்பட்டி அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் பைக் பின்புறம் அமர்ந்து வந்த சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், வீரையா காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் இறந்த சுப்பிரமணி உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
