சிவகங்கை, ஜன.5: இளையான்குடியில் வடக்கு ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் இளைஞரணி கிளை அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ தலைமை வகித்தார். இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூர் செயலாளர் நஜூமுதீன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலைச்சாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.
பாண்டிச்சேரி எம்எல்ஏ சம்பத் சிறப்புரையாற்றினார். இளைஞரணியின் பணிகள், கட்சி வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளையான்குடி பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, அவைத் தலைவர்கள் பெரியசாமி, அஜூஸ்கான், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், ராஜேந்திரன்,
