×

பிட்ஸ்

* மும்பை அணிக்காக களமிறங்கும் ஸ்ரேயாஸ்
மும்பை: நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த அக்டோபரில் நடந்த போட்டியில் பீல்டிங்கின்போது காயமடைந்தார். அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், போட்டிகளில் ஆட முடியாமல் இருந்தார். இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் வரும் 6ம் தேதி, மும்பை அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* எம்ஐ எமிரேட்ஸ் பைனலுக்கு தகுதி
ஷார்ஜா: ஐஎல்டி20 2வது தகுதிப் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் – அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய அபுதாபி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் அலிஷான் ஷராபு 40 பந்துகளில் 50 ரன் எடுத்தார். பின், 121 ரன் இலக்குடன் ஆடிய எமிரேட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் டாம் பேன்டன் அட்டகாசமாக ஆடி 53 பந்துகளில் ஒரு சிக்சர் 7 பவுண்டரிகளுடன் 64 ரன் குவித்தார். ஷகிப் அல் ஹசன் 24 பந்துகளில் 38 ரன் எடுத்தார். அதனால், 16.1 ஓவரில் எமிரேட்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் டிசர்ட் வைபர்ஸ் அணியுடன் எமிரேட்ஸ் மோதவுள்ளது.

* வன்முறை எதிரொலி முஸ்தபிசுர் நீக்கம்
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக நடந்த ஏலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைச்சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த கலவரங்களில் பல இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வங்கதேச வீரர் ஐபிஎல் அணியில் இடம்பெறுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்கும்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிசிசிஐ உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுப்படி, முஸ்தபிசுர் ரஹ்மானை கேகேஆர் நீக்கியுள்ளது.

Tags : Pitts ,Shreyas ,Mumbai Mumbai ,Shreyas Iyer ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி