சென்னை: பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில்; “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் (காஞ்சிபுரம் மாவட்டம்) கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
