- தூத்துக்குடி கிறிஸ்துமஸ் மர விழா
- தூத்துக்குடி
- ஓய்வு பெற்ற
- நீதிபதி ஜோதிமணி
- கிறிஸ்துமஸ் மரம்
- தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம்
- கிறிஸ்துமஸ் மர விழா
- வாகைக்குளம்
தூத்துக்குடி,டிச.23: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அலுவலக ஊழியர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற கிறிஸ்துமஸ் மரவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி பரிசுகள் வழங்கினார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அலுவலக ஊழியர்களுக்காக கிறிஸ்துமஸ் மரவிழா வாகைகுளத்தில் உள்ள தனியார் உணவகத்தில் நடந்தது. தலைமை வகித்த திருமண்டல தேர்தல் கமிஷனரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினார். நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.டி.சந்தோசம், திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஜெபராஜன், நிதி ஆலோசகர் அன்பர்தாஸ், பள்ளி தாளாளர்கள் பிரபாகர், பாரி, ரமா முன்னிலை வகித்தனர். பரி.பேட்ரிக் இணை பேராயலய சேகர தலைவர் செல்வின்துரை ஆரம்ப ஜெபம் செய்து விழாவைத் துவக்கிவைத்தார். இதில் குடும்பத்தினருடன் பங்கேற்ற திருமண்டல அலுவலக ஊழியர்கள் சிறப்பு பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து பாளை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். இதையடுத்து இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருமண்டல மேலாளர் தேவா காபிரியல் ஜெபராஜன் மேற்பார்வையில் திருமண்டல அலுவலக தலைமை எழுத்தர் செல்வின் செய்திருந்தார்.
