- எம்.எஸ். தரணிவேந்தன்
- வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- வந்தவாசி
- சென்னை
- கன்னி கோவில் ராஜா
- வந்தவாசி டவுன் தீயணைப்பு நிலையம்...
வந்தவாசி, நவ.22: வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சிறுவர்களுக்கான சிறுகதை தமிழில் இருந்ததை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட்டார்.
சிறுவர்களுக்கான எழுத்தாளர் சென்னை கன்னி கோவில் ராஜா தமிழில் எழுதிய சிறுகதையை வந்தவாசி டவுன் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள், 6 மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒவ்வொருவரும் சுமார் 20 பக்கத்திற்கு 10 சிறுகதைகளை மொழிபெயர்த்தனர். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தகத்தினை வெளியிடும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ஜலால் தலைமை தாங்கினார். ஆணையாளர் சோனியா, திமுக நகர செயலாளர் தயாளன், கவுன்சிலர் கிஷோர் குமார், வட்டார கல்வி அலுவலர்கள் செந்தமிழ், தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார்.
இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு சிறுவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்தினை வெளியிட்டு பேசுகையில், ‘அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் திறமை உள்ளது என்பதை இப்பள்ளியை சேர்ந்த 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நிரூபித்துள்ளனர். ஒவ்வொரு மாணவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல் பாராட்டத்தக்க கூடியது. இதேபோன்று மற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். சிறுவயதிலேயே இந்த முயற்சி மேற்கொண்ட மாணவர்களின் செயல் பெரிதும் பாராட்டக்கூடியது மேலும் இவர்கள் பல்வேறு சாதனைகளை புரிவார்கள் என நம்புகிறேன்’ என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பெருமாள், நகராட்சி துணைத்தலைவர் சீனிவாசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு செயலாளர் இஷாக், கவுன்சிலர்கள் மகேந்திரன், ஜெய்பிரகாஷ், நாகூர் மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினார்.
