- மார்கழி
- கண்ணமங்கலம், கலசபாக்கம்
- கண்ணமங்கலம்
- தினம்
- மாதம்
- கலசபாக்கம்
- கொளத்தூர்
- மார்கழி மாத அமாவாசை நாள்
கண்ணமங்கலம், டிச.20: கண்ணமங்கலம், கலசபாக்கம் பகுதிகளில் மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று நடந்த எருதுவிடும் விழாக்களில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் ஆண்டுதோறும் மார்கழி அமாவசையன்று பாரம்பரிய முறைப்படி எருது காணும் விழா நடத்தப்படுவது வழக்கம். இது பொங்கலுக்கு முன் தமிழகத்திலேயே முதன்முறையாக தொடங்கி வைப்பது காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது எனவும், விவசாயிகள் தங்கள் காளைகளை கொண்டு வந்து வீதியில் காட்சிப்படுத்துவார்கள் எனவும், பரிசுகள் எதுவும் வழங்காமல் பாரம்பரிய முறைப்படி இந்த விழா நடைபெறுவதால், எந்தவித முன் அனுமதியும் பெற வேண்டியிருப்பதில்லை எனக்கூறப்படுகிறது. இதன்படி, நேற்று நடந்த காணும் விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் காளைகளை அழைத்து வந்து வீதியில் காட்சிப்படுத்தினர். இதனை சுற்றப்புற கிராமங்களிலிருந்து வந்திருந்த திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர். பொங்கலுக்கு முன் முதன்முறையாக நடைபெறும் எருது காணும் பாரம்பரிய திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி கிராமத்தில் எருதுவிடும் விழா நேற்று நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் காளைகளை கொண்டு வந்தனர். கூட்டத்தில் மத்தியில் சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் உற்சாகப்படுத்தினர்.
