×

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யாறு, கலசபாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில்

செய்யாறு, டிச.23: செய்யாறு, கலசபாக்கம் மற்றும் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் வருகையொட்டி பாதுக்காப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி ஆய்வு செய்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26 மற்றும் 27ம் தேதி வருகை தந்து பல்வேறு அரசு திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். மேலும், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

மேலும், திமுக சார்பில் கலசபாக்கம், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருவமான கலைஞரின் திருஉருவ சிலையை திறந்து வைக்கிறார். இதற்கான பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்யாறுக்கு நேற்று மதியம் வேலூர் சரக டிஐஜி ஜி.தர்மராஜன் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் திருஉருவ சிலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது திருவண்ணாமலை எஸ்பி எம்.சுதாகர், ராணிப்பேட்டை மாவட்ட ஏடிஎஸ்பி குணசேகரன், செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கார்த்திக், செய்யாறு இன்ஸ்பெக்டர் (பொ) மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருவண்ணாமலையில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து, கலசபாக்கம் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, போளூர், சேத்துப்பட்டு வழியாக சென்று வந்தவாசி பகுதியில் கலைஞரின் உருவ சிலை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டார். அதன்பிறகு செய்யாறு வழியாக திருவண்ணாமலைக்கு டிஐஜி தர்மராஜன் சென்றார்.

Tags : DIG ,CM ,MK ,Stalin ,Cheyyar ,Kalasapakkam ,Vandavasi ,Chief Minister ,Tamil Nadu ,Chief Minister MK Stalin ,Tiruvannamalai district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை...