ஜம்மு: காஷ்மீழ் மேகவெடிப்பில் சிக்கி மாயமான 81 பக்தர்கள், ஒரு வீரரை தேடும் பணி மூன்றாவது நாளாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிசோட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேகவெடிப்பு ஏற்பட்டது.இதில் தற்காலிக சந்தை, யாத்திரைக்கான சமையலறை மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் ஆகியவற்றை தரைமட்டமாக்கியது. குறைந்தது 16 வீடுகள், அரசு கட்டிடங்கள், மூன்று கோயில்கள், நான்கு ஆலைகள் பாலம் உள்ளிட்டவை வெள்ளத்தில் சேதமடைந்தன. வியாழன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் மொத்தம் 82 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 81 பேர் பக்தர்கள் மற்றும் ஒருவர் சிஐஎஸ்எப் வீரர் ஆவார் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பார்வையிட்டார். பின்னர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ2லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றார்.
