×

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நாட்டுக்கு பயனளிக்கும்: தேஜ எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைலையில் தேஜ கூட்டணி நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, பாஜ, தெலுங்குதேசம், எல்ஜேபி(ஆர்),சிவசேனா, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு. இது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்று கூறியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ஒருவர் தெரிவித்தார்.

பின் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: எம்பிக்களிடையே மோடி பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது. தொடர்ந்து மக்களுக்கான நல்ல பணிகளை தொடர வேண்டும். நாம் களத்தில் நின்று மக்கள் நலனுக்காக நல்ல பணிகளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Tags : America ,Modi ,Teja ,New Delhi ,Teja alliance ,Rajnath Singh ,Amit Shah ,BJP ,Telugu Desam Party ,LJP ,R ,Shiv ,Sena ,JD ,Prime Minister… ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...