×

ஒட்டன்சத்திரம் கப்பல்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம், ஆக. 14: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி கப்பல்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. கோட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்தார்.  இம்முகாமில் துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சில மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, திமுக மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்புச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் செல்வகுமார் மற்றும் துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Stalin ,Ottanchathram Kapalapatti ,Ottanchathram ,Kapalapatti ,Chikkamanayakkanpatti Panchayat ,Thoppampatti Union ,Ottanchathram Assembly Constituency ,Kottakshiyar Kannan ,
× RELATED ஏம்பல் பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்