மான்ட்ரியல்: கனடாவில் நடக்கும் மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (22 வயது, போலந்து) மோதிய பெகுலா (29 வயது, 3வது ரேங்க்) 6-2 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஸ்வியாடெக் 7-6 (7-4) என டை பிரேக்கரில் வென்று பதிலடி கொடுக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் இகாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த பெகுலா 6-2, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 30 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். ரைபாகினா – சாம்சனோவா இடையே நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறுபவருடன் பைனலில் பெகுலா மோத உள்ளார்.
சின்னர் முன்னேற்றம்: கனடாவின் டொரான்டோ நகரில் நடக்கும் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் விளையாட, இத்தாலி வீரர் யானிக் சின்னர் (21 வயது, 8வது ரேங்க்) தகுதி பெற்றார். அரையிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலுடன் (26 வயது, 14வது ரேங்க்) மோதிய சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 3வது முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ள அவர், டொரான்டோவில் முதல் முறையாக பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோத உள்ளார்.
The post மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ், பைனலில் பெகுலா: இகா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.