ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது. மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளாக விளங்கி வரும் இந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் ஈரானில் இதுவரை 600க்கும் பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300-க்கு அதிகமானோர் காயமடைந்த தாகவும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
கடந்த ஒருவாரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இத்தகைய கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது. எனினும், இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்காவும் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post தொடர் ஏவுகணை தாக்குதல்கள்: இஸ்ரேல் மீது குண்டுமழை பொழியும் ஈரான்..! appeared first on Dinakaran.
