பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட திட்டங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த அறிவிப்புகளின் கூட்டம் நடந்தது.

இதில், 2021-22 முதல் 2024-2025 வரையிலான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ஆணை வெளியிடப்பட்டு செயல்பாட்டில் அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும், 2025-26ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், சிறப்பு செயலாளர், கலையரசி, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர், சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர், சுரேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட திட்டங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: