பழநியில் தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்: சமூக வலைதளங்களில் வைரலால் பரபரப்பு

பழநி: பழநியில் தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து அடிக்கடி போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயிற்சிக்காக பழநி பகுதியில் வட்டமடிப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, பழநி பகுதியில் மிக தாழ்வாக பறந்து வருகிறது. குறிப்பாக கோயில் பகுதியில் மிகுந்த சத்தத்துடன் பறந்து செல்லும் ஹெலிகாப்டரை பொதுமக்கள் ஆர்வமுடன் வெளியே ஓடி வந்து பார்த்தனர். பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

The post பழநியில் தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்: சமூக வலைதளங்களில் வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: