மிக்ஜாம் புயலால் தமிழகம், புதுவை, ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு வேதனை அளிக்கிறது: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: மிக்ஜாம் புயலால் தமிழகம், புதுவை, ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரத் தொடங்கியது.

தற்போது மணிக்கு 7 கி.மீ தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல் நெல்லூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே பபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர்.
சென்னையில் 162 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கு மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மு3காமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் தமிழகம், புதுவை, ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு வேதனை அளிக்கிறது. மேலும் புயல் பாதித்த தமிழகம், புதுவை, ஆந்திர அரசுகளுக்கு ஒன்றிய அரசு தேவையான உதவி வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு உதவிகளை காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் எனவும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயலால் தமிழகம், புதுவை, ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு வேதனை அளிக்கிறது: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: