2023-2024ம் ஆண்டில் பாதுகாப்பு துறை உற்பத்தி ரூ.1.27லட்சம் கோடி: ராஜ்நாத்சிங் பெருமிதம்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், ‘‘மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களை தாண்டியுள்ளது. இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக வளர்ப்பதற்கு சாதகமான ஆட்சியை உருவாக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் 2023-2024ம் நிதியாண்டில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் பாதுகாப்பு துறை அமைச்சகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023-2024ம் ஆண்டு பாதுகாப்பு துறையில் உற்பத்தி சுமார் ரூ.1.27லட்சம் கோடி என்ற சாதனையை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் பாதுகாப்பு உற்பத்தியை காட்டிலும் 16.7சதவீதம் கூடுதல் வளர்ச்சியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 2023-2024ம் ஆண்டில் பாதுகாப்பு துறை உற்பத்தி ரூ.1.27லட்சம் கோடி: ராஜ்நாத்சிங் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: