ஏ பிரிவில் மாலத்தீவுகள், மங்கோலியா, நேபாளம்; பி பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான்; சி பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் இடம் பிடிக்கும் 3 அணிகளும், ஒட்டுமொத்தமாக 2வது இடம் பிடிக்கும் அணிகளில் சிறந்த ஒரு அணி என மொத்தம் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்தியா விளையாடும் முதல் காலிறுதி அக்.3ம் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்கும்.
* 2010ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், 2014ல் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளன.
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், பிரப்சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது, ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங், திலக் வர்மா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர்.
The post ஆண்கள் டி20 இன்று ஆரம்பம்: நேரடியாக காலிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.