9 ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க காலக்கெடு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை 9 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அதிரடி உத்தவிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் படிப்பு குறித்து வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்கியுள்ளது. அந்த ஆணையில், ‘ஒரு மாணவர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்குள் படிப்பை(கோர்ஸ்) முடிக்க வேண்டும்.நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம்தான் சேர்க்கை நடைபெற வேண்டும். எம்பிபிஎஸ் முதலாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தேர்வு எழுத 4 முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் படிப்பை தொடர அனுமதிக்கப்படமாட்டாது’ என தெரிவித்துள்ளது.

The post 9 ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க காலக்கெடு: ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: