மயிலாடுதுறை அருகே நரிக்குறவர் சமுதாயத்தினர் 100 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நரிக்குறவர் சமுதாயத்தினர் 100 பேருக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவிழந்தூரில் உள்ள பல்லவராயன் பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் உண்டு உறைவிட பள்ளியில் வருவாய்த்துறை சார்பில் நரிக்குறவர் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்கப்பட்டது. ஆட்சியர் மகா பாரதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பழங்குடியின சான்றிதழ் பெற்றவர்கள் தங்களது பலநாள் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்தனர். பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைத்துள்ளதால் அரசு வேளைக்கு செல்வோம் என்று மக்கள் நம்பிக்கையுடன் கூறினர்.

The post மயிலாடுதுறை அருகே நரிக்குறவர் சமுதாயத்தினர் 100 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!! appeared first on Dinakaran.

Related Stories: