உடல் உஷ்ணத்தை குறைக்கும் மங்குஸ்தான்!

நன்றி குங்குமம் தோழி

*மங்குஸ்தான் பழம் பல ஊட்டச் சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தானது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒமேகா அமிலங்களும் இதில் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி உண்டு.

*இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுப் பிரச்னையை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கும்.

*மங்குஸ்தான் பழ ஜூஸ் சாப்பிட்டு வர உஷ்ணத்தால் ஏற்படும் மூல பிரச்னை, மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும்.

*இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

*இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நாக்கு வறண்டு போவதை தடுக்கும். கார்போஹைட்ரேட், புரத சத்துகள் உடல் ஆற்றலை அதிகரித்து சீரான வளர்ச்சி பெற இப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.

*மங்குஸ்தான் பழம் ஆஸ்துமா, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்திற்கும், கை கால் நகங்கள், தோல், தலைமுடி பளபளப்புடன் இருக்க உதவுகிறது.

*இரும்புச் சத்துகள், எலும்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது.

*இப்பழத்தை தினமும் சாப்பிட புற்றுநோய், காச நோயை எதிர்க்கும் அபூர்வ சக்தி நிறைந்துள்ளது.

*உணவுக்குழாயில் இருக்கும் கிருமிகளை கொல்லும், சிறுநீர் நன்கு வெளியேறக்கூடிய சக்தி இப்பழத்தில் உள்ளது.

*இப்பழம் சாப்பிட கண்களின் வறட்சி நீங்கி கண் எரிச்சல் நீங்கும். உடல் பருமன் குறையும். தோல் சுருக்கங்கள் நீங்கி, பளபளப்பு தன்மை அதிகரித்து இளமைத் தோற்றம் உண்டாகும். இதன் மேற்புறம் முள்ளு முள்ளாகவும், இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

*மங்குஸ்தானின் மற்றொரு பெயர் ‘ரம்பூட்டான்’ பழம். மலைப்பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.

– எஸ்.மாரிமுத்து, சென்னை.

The post உடல் உஷ்ணத்தை குறைக்கும் மங்குஸ்தான்! appeared first on Dinakaran.

Related Stories: